இருபத்தோராம் நூற்றாண்டின் பாரிய இன அழிவைச்சந்தித்துகக் கொண்டிருக்கும் ஒரு பாரம்பரிய இனம் நாங்கள்.எங்கள் மொழி பண்பாடு கலாச்சாரம் என்பவற்றை காலத்தோடு சிதைவடையாமல் கூட்டிச்சென்று அடுத்த தலைமுறைக்கு உண்மையுடன் கையளிக்க வேண்டிய கட்டாயப்பாடு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.
அதன் அடிப்படையில் உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்களின் படைப்பாற்றல் ஆதாரமற்ற கொடிகளாய் வீழ்ந்து கிடக்கின்றது. அவ்வாற்றலை இனங்கண்டு ஒருங்கிணைத்து அதன் தேவைக்கேற்ப வடிவமைத்து அனைத்து மக்களையும் சென்றடைவதற்காகவும், எம் இளம் தலைமுறையினருக்கு எம் பாரம்பரியத்தை பண்பாட்டை கலாச்சாரத்தை செலுத்துவதற்காகவும். எம் உண்மை வரலாற்றின் மீது பூசப்படும் கறைகளை துடைப்பதற்காகவும்.வரலாற்றை உண்மையுடன் நீட்டிச்செல்வதற்காகவும். எம் தமிழ்தேசத்துக்கு ஆதாரமாகவும். உலக தமிழ் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இலக்கிய கட்டமைப்பே தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை.
இதன் பணிகள் எப்போதும் தமிழோடும் தமிழ் தேசியத்தோடும் பயணிக்கும். ஆகவே தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை என்னும் பெரும் கட்டமைப்பில் அதன் பணியின் தேவை உணர்ந்த தமிழ் உள்ளங்கள் இணைந்து தமிழ் தமிழ்க்கலாச்சாரம். தமிழ்த் தேசியம் என்பவற்றோடு பயணிப்போம்.
“தமிழ் எங்கள் உயிருக்கு மேல்”
தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை
பிரான்ஸ்