சார்லி சாப்ளின் அருங்காட்சியகம் சுவிஸ்ஸில் திறப்பு
பிரபல பிரிட்டிஷ் நடிகர் சார்லி சாப்ளினின் வாழ்க்கையையும், பணியையும் போற்றும் வகையிலான அருங்காட்சியகம் இன்று சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டுள்ளது.
சாப்ளின் படங்களின் பயன்படுத்திய இந்தப் பிரம்புத்தடியும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது
ஞாயின்று திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், ஜெனீவா ஏரியின் கரைப்பகுதியில் அவர் கடைசி 25 வருடங்கள் வாழ்ந்த பரந்துவிரிந்த மெனோர் டெ பான் தோட்டத்தில் அமைந்துள்ளது.
பேசாப்படக் காலத்தில் நடித்து உலகப் புகழ்பெற்ற சாப்ளின் அந்தப் பெருந்தோட்டத்தில் தனது மனைவி ஊனா மற்றும் எட்டு பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்தார்.
படப்பிடிப்பு ஒன்றில் சார்லி சாப்ளின்
இந்த அருங்காட்சியகத்தில் அவர் பயன்படுத்திய தொப்பி மற்றும் பிரம்புத்தடி உட்பட அவரது படைப்புகளுடன் தொடர்புடைய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒப்பனையுடன் காட்சி ஒன்றுக்கு தயாராக இருக்கும் சாப்ளின்
கடந்த 1960ஆம் ஆண்டுகளில் அவர் அமெரிக்காவிலிருந்து தப்பி சுவிட்சர்லாந்து வந்தார்.
அவர் கம்யூனிஸ் இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து வெளியேறி சுவிட்சர்லாந்து வந்தார்.
ஒப்பனையின்றி பிபிசி கலையகத்தில் சாப்ளின்
அந்தக் காலப்பகுதியில் அமெரிக்காவில் இடதுசாரி ஆதரவாளர்கள் எனக் கருதப்பட்டவர்களை தேடிப்பிடித்து ஒடுக்கும் நடவடிக்கைகள் உச்சகட்டத்தில் இடம்பெற்றன.பிபிசி செய்திகள்