பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக் குழுத் தலை­வ­ராக இன்ஸமாம் உல் ஹக் நியமனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக் குழுத் தலை­வ­ராக முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் நிய­மிக்­கப்­பட்டுள்ளார்..
இதன் கார­ண­மாக ஆப்­கா­னிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்­றுநர் பத­வி­யி­லி­ருந்து வில­கிக்­கொள்­வ­தாக இன்­ஸமாம் அறி­வித்­துள்ளார்.
paakki
இந்­தி­யாவில் அண்­மையில் நடை­பெற்ற உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களின் சுப்பர் 10 சுற்­றுக்கு ஆப்­கா­னிஸ்­தானை இன்­ஸமாம் முன்­னேற்­றி­யி­ருந்தார். அப் போட்­டியில் சம்­பி­ய­னான மேற்­கிந்­தியத் தீவு­களை கடைசி லீக் போட்­டியில் ஆப்­கா­னிஸ்தான் வெற்­றி­கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
இவ் வருட இறு­தி­வரை ஆப்­கா­னிஸ்­தா­னுடன் இன்­ஸமாம் ஒப்­பந்தம் செய்­து­கொண்­டி­ருந்தார்.

எனினும் இன்­ஸ­மாமை விடு­விக்­கு­மாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷஹா­ரியார் கான் கோரி­ய­தாக ஆப்­கா­னிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷவிக் ஸ்டனிக்ஸாய் தெரி­வித்தார்.

தனது நான்கு போட்­டி­களில் மூன்றில் தோல்வி அடைந்­ததால் உலக இரு­பது கிரிக்­கெட்­டி­லி­ருந்து பாகிஸ்தான் வெளி­யே­றி­யதை அடுத்து அணித் தலைவர் ஷஹித் அவ்­றிடி, தலைமைப் பயிற்­றுநர் வக்கார் யூனிஸ் ஆகியோர் தங்­க­ளது பத­வி­க­ளி­லி­ருந்து விலக நேரிட்­டது.

1992 உலகக் கிண்ண கிரிக்கட் போட்­டி­களில் பாகிஸ்தான் சம்­பி­ய­னா­வ­தற்கு பிர­தான பங்­காற்­றி­யி­ருந்த இன்­ஸமாம் உல் ஹக், 120 டெஸ்ட் போட்­டி­க­ளிலும் 378 சர்­வ­தேச ஒருநாள் கிரிக்ெகட் போட்­டி­க­ளிலும் விளை­யா­டி­யி­ருந்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக் குழுத் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்டுள்ள இன்ஸமாம், அதற்கும் மேலாக தலைமைப் பயிற்றுநராக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Copyright © 2641 Mukadu · All rights reserved · designed by Speed IT net