ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மாணவ – மாணவிகளுக்கு பட்டங்களை அளித்துள்ளார்.
பட்டங்களை அளித்த பின்னர் பேசிய மோடி, நாட்டில் உள்ள இதர பல்கலைக்கழகங்கள் மக்களின் வரிப்பணத்தாலும், மாணாக்கர்களின் பெற்றோர்கள் செலுத்தும் கட்டணங்களாலும் இயங்கி வருகின்றன.
ஆனால், வைஷ்ணவ தேவி ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணத்தால் மட்டுமே இயங்கி வருவது ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி பல்கலைக்கழகத்தின் சிறப்பம்சமாகும்.
இந்தப் பல்கலைக்கழகமானது, வெகு தூரத்தில் இருந்து வைஷ்ணவ தேவி கோவிலுக்கு வந்த பல லட்சம் பக்தர்களின் காணிக்கையால் உருவானதாகும்.
இங்கு படித்து, பட்டதாரியாகி வெளியே போகிறவர்கள், ஏழை மக்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என சபதமேற்றுக் கொள்ள வேண்டும்.
உங்களை பட்டதாரிகளாக்குவதற்கு உங்கள் பெற்றோர் செய்துள்ளதை எல்லாம் எண்ணிப் பாருங்கள். உங்களுடைய சந்தோஷத்துக்காக தங்களது சந்தோஷங்களை அவர்கள் தியாகம் செய்துள்ளனர்.
21-ம் நூற்றாண்டுக்கு தேவையான ஆற்றல், அறிவாற்றல் நமது நாட்டில் உள்ளதால் 21-ம் நூற்றாண்டுக்கு இந்தியா தலைமை தாங்கும்.
35 வயதுக்குட்பட்ட 80 கோடி மக்களின் இளைஞர் சக்தி நம்மிடம் உள்ளது. இவர்களில் ஒவ்வொரு இளைஞனின் கனவும் இந்த நாட்டின் முன்னேற்றதிற்கான ஒரு கதையாக உருவாக முடியும்.
இவ்வளவு இளைஞர்கள் நிறைந்த நாட்டில் நாம் இன்னும் அதிகமாக சாதிக்க முடியும் என பேசியுள்ளார்.