இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக அரசு முன்வைத்த பரிந்துரையை மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ராஜீவ்காந்தி கொலையுடன் தொடர்புடைய ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக அரசு முன்வைத்த பரிந்துரையை இரண்டாவது முறையாக மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இதற்குமுன்னர் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் 2014 ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் இந்த விடயம் பாரப்படுத்தப்பட்ட பின்னர் கைதிகளை விடுவிப்பதற்கான அதிகாரம் தமக்கு இல்லை என மத்திய உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மாநில அரசின் பரிந்துரை தொடர்பில் சட்ட அமைச்சிடம் கருத்துக் கேட்டதாக இந்திய உள்விவகார அமைச்சின் மூத்த அதிகாரியொருவர் த ஹிந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுவிக்க முடியாது என மத்திய அரசாங்கம் தமிழக அரசுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.