எரிபொருள் செயற்திறனில் மோசடி செய்த பிரபல கார் நிறுவனம்

cars
ஜப்பானியா கார் நிறுவனமான மிட்சுபிஸி, தனது 6,00,000 வாகனங்களில் பொய்யான எரிபொருள் செயற்திறன் தகவல்களை காண்பித்ததாக ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த விடயம் வெளியானதை அடுத்து அதன் பங்கு விலைகள் 15 வீதத்துக்கும் அதிகமான வீழ்ச்சியை கண்டன.

தமது வாகனங்கள் குறைந்த எரிபொருளில் கூடிய அளவு மைல்களை ஓடுவதாக காண்பிப்பதற்காக எரிபொருள் திறன் சோதனைகளை முறையற்ற விதத்தில் செய்ததாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மிட்சுபிஸி ஒப்புக்கொண்டது.

அவற்றில் பெரும்பாலான கார்கள் தமது ஜப்பானிய சக நிறுவனமான நிஸானுக்காக தயாரிக்கப்பட்டவையாகும்.

உலகெங்கும் ஒரு கோடியே பத்து லட்சம் கார்களில் காபன் வெளியேற்ற சோதனையில் ஏமாற்றியதாக ஜேர்மனிய கார் நிறுவனமான ஃபொக்ஸ்வாகன் நிறுவனம் ஒப்புக்கொண்ட 6 மாதங்களின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Copyright © 2335 Mukadu · All rights reserved · designed by Speed IT net