குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலம்’ நாங்கள் அறிந்த, எங்களுக்கு நெருக்கமான நிலம் தான். இருந்த போதும் போர்வாழ்வை இரத்தமும் சதையுமாக உள்ளார்ந்த பார்வையுடன் பதிவுசெய்கிறது.
வேவுப்போராளிகளும் வேவு நடவடிக்கைகள் சார்ந்த சம்பவ விபரிப்புகளும் இந்த நாவலின் மையப்புள்ளி. பல இடங்களில் திகில் நிறைந்த சம்பவங்களுடன் கதை நகர்கிறது.
போர் நிலத்தின் வீரம், அர்ப்பணிப்பு, சாகசம், தோல்வி மட்டுமல்ல. கசிந்துருகும் காதல், போர்வாழ்வின் உத்தரிப்புகளோடு பிரவுத்துயரும் விரவிக்கிடக்கிறது. கொடும் போருக்கு முகம்கொடுத்தவாறு, விடுதலை வாழ்வை அவாவி நின்றவர்களின் பாடுகளை நாவல் பேசுகின்றது.
ரோமியோ, மணி, வீரா, வீராவின் அம்மாவும் மனதை விட்டு அகலாத அழுத்தமான பாத்திரப்படைப்புகள். அன்றைய போர் நிலத்தின் மாந்தர்களைக் கண்முன் கொண்டுவரும் இன்னும் பல கனதியான பாத்திரங்களையும் தரிசிக்க முடிகிறது.
பிறிதொரு சந்தர்ப்பத்தில் சற்று விரிவான வாசிப்பனுபவத்தைப் பகிரவுள்ளேன்!