லண்டனில் வெளிவரும் வார இதழுக்கு [ ES Magazine 22.04 2016] அளித்த பேட்டியொன்றில் ஈழம் பற்றிய நினைவுகளையும், இலங்கை அரசின் மனிதவுரிமை மீறல்களையும் மீண்டும் பதிவுசெய்துள்ளார்.
அவரைப் பேட்டிகண்ட ரிச்சாட் கொல்வின்”
**எது உங்களைப் பயம்கொள்ளச் செய்யும்??…
தாமதிக்காமல், “எதுவுமே இல்லை.நான் என்றோ இறந்திருக்க வேண்டியவள் ,உண்மையில் உயிரோடிருப்பது அதிஷ்டவசமானது, நான் போரிலிருந்து வந்தவள், நான் அங்கு வாழும்போது, ஒரு 25 வயதுவரைகூட வாழ்வேன் என்று நினைத்திருக்கவில்லை. தற்போது இலங்கை அரசு, பிரச்சனைகள் யாவும் தீர்ந்துவிட்டன, வந்து பாருங்கள் என்கிறது., இலங்கை அரசு செயல்ப்படும் விதத்தில், நான் கொல்லப்படலாம் , அதற்கு இலங்கை அரசு, குளிக்கப்போனார், சுறாமீன் தின்றுவிட்டது, நாம் என்னசெய்யலாம் என்றுதான் கூறும்”
.
யுத்தம் நடந்த காலத்தில் தமிழ்மக்களின் நியாயமான போராட்டத்தை எடுத்துக்கூறியவர்தான் மாயா.
அத்துடன், போரில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டதை வெளியுலகுக்கு தம்மால் முடிந்தவளவுக்கு எடுத்துக்கூறியவர்தான் இந்த மாயா.
இதனால் இலங்கை அரசு, இவரைப் பயங்கரவாத ஆதரவு முத்திரை குத்தியதுடன், இவருக்கெதிரான பிரச்சாரங்களையும் முன்னெடுத்திருந்தது.
அண்மையில் தமிழகத்திலுள்ள அகதிமுகாமுக்குச்சென்று, ஈழத்தமிழர்களைச் சந்தித்ததாகவும், தன்னைப்பொறுத்தவளவில் அவர்களுடைய பிரச்சனை தனக்குள்ளே என்றும் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.