இஸ்ரேலிய சிறையிலிருந்த பலஸ்தீன சிறுமி (12) ஒருவர் இரண்டுமாத சிறை தண்டனைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பலஸ்தீனக் கைதிகளில் மிகக்குறைந்த வயதை உடையவராவார் இந்த சிறுமி.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கு கரையில் அவரது குடும்பத்துடன் இணைந்தார். விடுதலையான இந்த சிறுமியை அந்த நகரின் ஆளுநர் உட்பட பலரும் வரவேற்றுள்ளனர்.
குறித்த சிறுமி கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி பாடசாலை சீருடையில் கத்தியுடன் யூதக் குடியேற்றப்பகுதியிலிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
இதுவரையில் பலஸ்தீனர்களின் கத்திக்குத்து மற்றும் கார் தாக்குதலில் 28 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 200 பலஸ்தீனர்களும் கொல்லபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.