கடும் மின்சாரப் பற்றாக்குறை நிலவி வருவதால் வெனிசுலாவில் வாரத்தில் 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு, 2 நாட்கள் மட்டுமே பணி நடைபெறும். தென் அமெரிக்காவிலுள்ள, வெனிசுலா நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து அங்கு மின்சார தட்டுப்பாடு நிலவுகிது. மின்சாரம் இல்லாத காரணத்தால், அந்நாட்டு அரசு அலுவலகங்கள் வாரத்தில் திங்கள், செவ்வாய் கிழமை மட்டுமே செயல்பட உள்ளது. மிக அத்தியாவசியமான பணிகளைத் தவிர, பிற பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகளுக்கு புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு அரசு விடுமுறை நாட்கள் என்பதால், திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்கள் மட்டுமே இனி அரசு அலுவலகங்கள் திறந்திருக்கும்.