68 மில்லியன் யூரோ மதிப்பிலான யானை தந்தங்கள் தீயிட்டு எரிப்பு: காரணம் என்ன?

625.0.560.350.160.300.053.800.668.160.90
கென்யாவில் சட்டவிரோதமாக வன விலங்குகளை வேட்டையாடி பணம் சம்பாதிப்பதை தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சுமார் 68 மில்லியன் யூரோ மதிப்பிலான யானை தந்தங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.

ஆப்ரிக்க கண்டத்தில் தந்தத்துக்காக நாள்தோறும் பல காட்டு யானைகள் வேட்டையாடப்படுகின்றன. இதற்கு முள்ளிபுள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கென்யாவில் உள்ள நைரோபி தேசிய பூங்காவில், 7000 யானைகளிடம் இருந்து வேட்டையாடப்பட்ட 105 டன் எடையுடைய தந்தங்களை கென்ய ஜனாதிபதி உத்தரவின் பேரில் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

அப்போது பேசிய கென்ய ஜனாதிபதி, காட்டு யானைகளின் அழிவை தடுக்க வேண்டும் என்றால், தந்தத்துக்காக நடக்கும் இந்த கொலைகார கடத்தல் முற்றிலும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

யாரும் தந்தத்தை வைத்து வணிகம் செய்ய கூடாது. தந்தத்தை வைத்து செய்யும் தொழில் மரணத்திற்கு சமம். நம் யானைகளின், நம் இயற்கை பாரம்பரியத்தின் மரணம் என பேசியுள்ளார்.

ஆப்ரிக்காவில் 15 நிமிடத்திற்கு ஒரு யானை தந்தத்திற்காக வேட்டையாடப்படுகிறது. 4 லட்சம் முதல் 5 லட்சம் யானைகள் இருந்த ஆப்ரிக்காவில், வருடத்திற்கு 30,000த்திற்கும் மேற்பட்ட யானைகள் வேட்டையாடப்படுகின்றன.

இவ்வாறு வேட்டையாடப்படும் தந்தங்கள் ஆசிய நாடுகளுக்கு தான் அதிகளவில் விற்கப்படுகிறது. தற்போது எரிக்கப்பட்டுள்ள சுமார் 16000 யானை தந்தங்களின் கடத்தல் சந்தை விலை சுமார் 68 மில்லியன் யூரோக்களுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net