மத்திய ஆப்பிரிக்க நாடான செக் குடியரசுக்கு நிர்வாக வசதிக்காக “செக்கியா” என்று புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இனி அதிகாரப்பூர்வ “செக் குடியரசு” என்ற பெயருடன், “செக்கியா’ என்ற பெயரிலும் அந்த நாடு அழைக்கப்படும்.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் அதிகாரப்பூர்வ பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருந்தாலும் அவற்றை எளிதாகக் குறிப்பிடுவதற்கேற்ப ஒற்றைச் சொல் பெயர்கள் உள்ளன.
எனினும், கடந்த 1993 ஆம் ஆண்டு ஸ்லோவேகியாவிடமிருந்து பிரிந்த செக் குடியரசுக்கு அத்தகைய ஒற்றைச் சொல் பெயர் இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், செக் குடியரசுக்கு “செக்கியா’ என ஒற்றைச் சொல் பெயரிடுவதற்கு அதிபர் மிலோஸ் ஸிமான், பிரதமர் பூஸ்லாவ் சொபோட்கா, அந்நாட்டு பாராளுமன்ற அவைத் தலைவர்கள் உள்ளிட்டோர் கடந்த மாதம் பரிந்துரைத்தனர்.
அதன் தொடர்ச்சியாக, தற்போது அந்தப் பெயருக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.