பிரிட்டிஷ் தேர்தல்கள்: ஸ்காட்லாந்தில் தொழிற்கட்சி பெரும் பின்னடைவு

லண்டன் மேயருக்கான போட்டியில், தொழிற்கட்சியின் சாதிக் கான் முன்னணியில் உள்ளார்.
160506051049_uk_local_elections_ballots_getty___512x288_getty_nocredit
பிரிட்டனில் நடந்துமுடிந்துள்ள தேர்தல்களில் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி பெரிய அளவில் சோபிக்கத் தவறியுள்ளது.

கட்சியின் புதிய தலைவராக ஜெரமி கார்பின் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அந்தக் கட்சி சந்தித்துள்ள முதலாவது அரசியல் சோதனையாக இந்தத் தேர்தல்கள் பார்க்கப்பட்டன.

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய பின்னடைவாக தொழிற்கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் ஒருகாலத்தில் செல்வாக்கு பெற்ற கட்சியாக தொழிற்கட்சி இருந்துள்ளது.

வேல்ஸ் சட்டசபைக்கான தேர்தலில் தொழிற்கட்சி முன்னணியில் இருக்கின்றது. பெரும்பான்மை பலத்தை பெறத்தவறியுள்ளது.

இங்கிலாந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலிலும் தொழிற்கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்வுகூறல்கள் இருந்தபோதிலும், தொழிற்கட்சி சில தொகுதிகளை இழந்தாலும் முக்கிய கவுன்சில்களை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

லண்டன் மேயருக்கான போட்டியில், தொழிற்கட்சியின் சாதிக் கான் முன்னணியில் உள்ளார்.

வெற்றி பெற்றவராக சாதிக் கான் அறிவிக்கப்பட்டால், அவர் தான் ஐரோப்பிய தலைநகர் ஒன்றில் முதலாவது முஸ்லிம் மேயராவார்
பிபிசி

Copyright © 4065 Mukadu · All rights reserved · designed by Speed IT net