இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்கு உதவ புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்வர வேண்டும் என நாட்டின் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் சம்பந்தர்
வடகிழக்கு மக்களுக்கு உதவுவது புலம்பெயர்ந்தோரின் கடமை சம்பந்தர்
தற்போது வடக்கு கிழக்கு பகுதிகளில் பொருளாதார அபிவிருத்திகளை விரைவுபடுத்த அரசு சில திட்டங்களைத் தீட்டிவரும் வேளையில், புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழகர்கள் அங்கு முதலீடு செய்து, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டியது புலம்பெயர் தமிழ் மக்களின் கடமை என திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் கூறினார்.
இலங்கை அரசும் பொருளாதார முதலீடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அந்த வாய்ப்பை புலம்பெயர் தமிழர்கள் பயன்படுத்திக் கொண்டு, வடக்கு கிழக்கு பகுதியில் முதலீடு செய்யவேண்டும் என சம்பந்தர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே இந்த ஆண்டின் இறுதிக்குள் நீடித்திருக்கும் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்று எட்டப்படும் எனும் நம்பிக்கை தனக்கு உள்ளது எனவும் அவர் தென்னைமரவாடியில் இடம்பெற்ற அந்நிகழ்வில் பேசும்போது கூறினார்.
பிபிசி