திருப்பி அனுப்பப்பட்டார்களா தமிழர்கள் தீயாக பரவும் வதந்தி .

13165945_1323763554305848_7758875734503038945_n

‘பிரான்சில் பொலீசாரால் சத்தமின்றி இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் ஒரு இணையம் யாரோ ஒருவர் சொன்ன தகவல் என்று செய்தி வெளியிட அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் பல இணையங்களும் சமூக வலைத்தளப்பதிவர்களும் மீள் பதிவு செய்து வருகின்றனர்.
இந்தச் செய்தி தவறானது.பிரான்சில் நீதி மன்ற அனுமதி இல்லாமல் அகதிகளை அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் அதிகாரம் காவல்துறைக்கு கிடையாது.தற்போது இங்கு அவசர காலச் சட்டம் நடைமுறையில் உள்ள போது கூட நீதி மன்ற அனுமதியுடன் தான் அகதிகளை காவல்துறையினர் தொடர்ந்து தடுத்து வைத்திருக்க முடியும்.
பிரான்சின் சட்டப்படி இங்கு பயங்கரவாத செயலில் ஈடுபட்ட அல்லது அதற்கு உதவியவர்கள் என்ற அடையாளம் காணப்பட்டவர்களைக் கூட கைது செய்யும் உரிமைதான் காவல்துறைக்கு உள்ளதே தவிர அவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு நீதிமன்ற அனுமதி இல்லாமல் அவர்களால் நாடுகடத்த முடியாது.
அண்மையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோருடைய குடியுரிமையை பறித்து(இரட்டை குடியுரிமை உள்ளவர்கள்) அவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் வகையில் தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்த சட்டம் நாடாளுமன்ற மேல்சபையில் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் இலங்கை தமிழர் ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு சென் சென்டெனி(93) மாவட்ட காவல்துறை தலைமையகம் விடுத்த உத்தரவை பொபினி(93) நிர்வாக நீதி மன்றம் இரத்துச் செய்தது சிறீலங்காவின் தற்போதைய சூழ்நிலையில் தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்றும் அது உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கில் எனது நண்பரான வழக்கறிஞர் அப்துல்லா போசா தான் வாதாடியிருந்தார்.
கடந்த 6 மாதத்தில் 4 தமிழர்கள் நீதிமன்ற உத்தரவுடன் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.அதுவும் இந்த நால்வரும் அதி உச்ச வன்முறை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள்.
கடந்த ஒரு மாத காலத்தில் எனது நிறுவனத்துக்கு ஊடாக அரசியல் தஞ்ச மீளாய்வு விண்ணப்பம் (Reexam) செய்தவர்களில் 5 பேரை ஒப்ரா விசாரணைக்கு அழைத்துள்ளது.இதிர் 2 பேர் 2 வது தடவை மீளாய்வு விண்ணம் செய்தவர்கள்.பொதுவாக நூற்றுக்கு 99 வீதம் மீளாய்வு விண்ணப்பத்தை ஒப்ரா விசாரணக்கு எடுக்காமலே நிராகரிப்பது தான் வழக்கம்.
இலங்கைத் தமிழர்கள் பிரொஞ்சு காவல்துறையால் நூற்றுக் கணக்கில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்பது பொய்.

நன்றி சிவா சின்னப்பெடி

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net