சமீபத்தில் சில அரசசார்பற்ற நிறுவனங்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வன்னியில் இராணுவத்தினரால் நடாத்தப்படும் முன்பள்ளிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளன. இந்தப் படங்களில் காணப்படும் சிறுவர்கள் சி.எஸ்.டி. என பொறிக்கப்பட்ட ரிசேட்டை அணிந்துள்ளனர். அத்துடன் அந்த உடையில் இராணுவத்தினரின் வாளுடன் நிற்கும் சிங்கத்தின் இலச்சினையும் பொறிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா இராணுவத்தினரால் நடாத்தப்படும் முன்பள்ளிச் சிறார்களுக்கு கட்டாயப்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட முன்பள்ளிச் சீருடை.
வன்னியில் சுமார் 270 இடங்களில் 8000 வரையான முன்பள்ளிச் சிறுவர்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கல்விகற்றுவருகின்றனர். இந்த முன்பள்ளிகள் அனைத்தும் வடக்கு மாகாணசபைக்குரிய முன்பள்ளிகளெனினும் அதனை வடமாகாண சபையிடம் ஒப்படைப்பதற்கு இராணுவத்தினர் மறுத்து வருகின்றனர்.
வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே விசுவமடு பண்ணைக்கு வருகைதந்தபோது
அண்மையில், முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடுவில் உள்ள பண்ணைக்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே பயணம் செய்தபோது, பல இடங்களிலிருந்து அழைத்துவரப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிங்களத்தில் தேசியகீதத்தைப் பாடுமாறு வற்புறுத்தப்பட்டதுடன், இராணுவத்தின் சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவில் இணைந்துள்ள பெண்கள் கன்டியன் நடனமாடி மலர்மாலை அணிவித்து வரவேற்பளித்தனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிவில் பாதுகாப்பு இராணுவத்தினரால் நடாத்தப்படும் முன்பள்ளி ஆசிரியர்கள் நீல நிற சேலையில்
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிவில் இராணுவத்தின் கறுப்புச் சீருடையில்
சிவில் பாதுகாப்பு இராணுவத்தினருடன் றெஜினோல்ட் குரே
நன்றி துளியம்