பென் செய்தியாளர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக பிரான்ஸின் நிதியமைச்சர் மிஷேல் சபா(ன்)ங் மன்னிப்பு கோரியுள்ளார்.
பிரெஞ்ச் நிதியமைச்சர் மிஷேல் சபா(ன்)ங்-(இடது)
எனினும் அவரை துன்புறுத்தியதானக் குற்றச்சாட்டை அமைச்சர் மறுத்துள்ளார்.
மாநாடு ஒன்றில், அந்தப் பெண் செய்தியாளரின் உள்ளடை எலாஸ்டிக்கை தான் பிடித்து இழுக்கவில்லை எனக் கூறியுள்ள சபா(ன்)ங், எனினும் அவரது உடை குறித்து பேசி அவரது பின்புறத்தை தொட்டதை ஒப்புக் கொண்டார்.
பிரெஞ்ச் நாடாளுமன்றத்திலுள்ள பசுமைக் கட்சியின் எட்டு பெண் உறுப்பினர்கள், துணை சபாநாயகர் டெனி போபான், தங்களை பாலியல் ரீதியாகத் தாக்கி, ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பினார் எனக் கூறியதை அடுத்து அவர் திங்கள்கிழமை பதவி விலகிய நிலையில், நிதியமைச்சரின் மன்னிப்பு வந்துள்ளது.
இதேவேளை பதவி விலகியுள்ள துணை சபாநாயகர், அந்தப் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மானநஷ்ட வழங்கு தொடர்ந்துள்ளார்.
பிபிசி