வித்தியாவை நினைவுகூர்ந்து அஞ்சலி.

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் அவரது இல்லத்தில் குடும்பத்தார் உறவினர்களால் வித்தியாவை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

vithya-3

vithya-2

யாழ்ப்­பாணம் புங்­கு­டு­தீவு 9ஆம் வட்­டாரம் வல்லன் பகு­தியைச் சேர்ந்­தவர். அம்மா அக்கா அண்ணா என ஒரு சிறிய குடும்­பத்தின் கடைக்­குட்டி இன்றை நாளில் வலது கரத்தை பறிகொடுத்துவிட்டு கண்ணீர் விழிகளோடு வித்தியாவின் தாயார் கலங்கி நிற்கின்றார்.

இன்றையதினம் வித்தியாவின் தாயார் கருத்து தெரிவிக்கையில் ….

எனது மகளுக்கு இந்த கொடுரமான சம்பவம் நிறைவடைந்து ஒருவருடம் கடந்துள்ள நிலையிலும் எனது மகளுக்கு நீதி கிடைக்கவில்லை குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. என் செல்லத்துக்கு நீதி கிடைக்கும்; என்று எனக்கு தெரியவில்லை . என் செல்லத்தை வக்கிரமான முறையில் படுகொலை செய்துவிட்டு நல்லவர்களைப்போன்று சட்டத்தின் முன் காட்டிக்கொள்கிறார்கள். கௌரவ ஜனாதிபதி எம் குடும்பத்தை சந்தித்து எமக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்றார். ஆனால் இன்றுடன் சரியாக ஒருவருடம் புர்த்தியாகியும் நீதி கிடைக்கவில்லை.

குற்றவாளிகளை தண்டிக்க சட்டத்தால் முடியாவிட்டால் தயவுசெய்து எங்களிடம் எப்படைக்கவும் நாங்கள் அவர்களுக்கு சரியான தீர்ப்பு வழங்குகின்றோம். தயவுசெய்து என் மகளுக்கு நீதியை பேற்றுக்கொடுங்கள் கையேடுத்து கும்பிட்டுகேட்டுக்கொள்கிறேன். விரைவாக கௌரவ நீதிவான் நீதிமன்றில் குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.

மேலும் உறவினர்கள் தெரிவிக்கையில் எங்கள் பிள்ளையை கொலை செய்தது இவர்கள் தான் எமக்கு நன்றாக தெரியும் சட்டம் இவர்களை நிச்சயம் தண்டிக்க வேண்டும். எங்கள் பிள்ளையை கட்டுகோப்பாக வளர்த்தோம் பழி தீர்ப்பு என்ற பெயரில் கொடுரமாக கொலை செய்துவிட்டார்கள். மனதின் வலி பிள்ளைகளை பறிகொடுத்தவர்களுக்கு தான் தெரியும் குற்றவாளிகள் நிச்சயம் சட்டத்திலிருந்து தப்பித்துகொண்டாலும் நாம் கும்பிடும் தெய்வம் கைவிடாது என தெரிவித்தனர்.
vithya-1

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net