அண்மைகாலமாக பலரால் பேசப்படும் பார்பக்கபடும் பேசுபொருள் யாழ் ரவுடிஷம்,கடும் கண்டனம், உயர் நீதிமன்றமே கடும்போக்கை கடைப்பிடிக்கும் அளவுக்கு அதன் எல்லை விரிந்து உள்ளது மிக சாதாரணமாக கடந்து போக முடியாது ,இது மிக ஆபத்தா வழிகாட்டல் அல்லது ஊக்கம் கொடுக்கும் செயலாக அமையும்…
இதில் ஒரு மஜிக் இருக்கிறது இந்த யாழ் குழு மோதல் ,வாள் வெட்டு என பேசும் போது ,பல தமிழர்கள் குறிப்பா புலம்பெயர் தமிழர்கள் பாவிக்கும், “சொல் அவர்கள் இருந்தால்” இப்படி எல்லாம் நடக்குமா,அல்லது நேரடியாக புலிகள் இருந்த போது இப்படி நடக்கவில்லை ;என மிக சுலபமாக தங்களின் இயலாமையை வேறு ஒரு பக்கம் திருப்பி விட்டு போவதை கவனிக்கலாம்…
இந்த கோஷ்டி மோதலை செய்பவர்கள் யார் ..?? எங்கிருந்து வந்தவர்கள்?? செவ்வாய்கிரகமா?? தென்னிலங்கையா??
பதில் இல்லை இவர்களும் யாழ்ப்பாணம் தான் ஆக எங்கு தவறு நடக்கிறது,ஒரு சாரார் போலீஸ் சேர்த்து ,ஒரு சாரார் புலனாய்வு அமைப்புகள் சேர்த்து ,ஒகே அப்படியாயின் இவர்களுக்கு குடும்பம் உறவுகள் இல்லையா, இந்த காவாலிகள் தங்ககம் எங்க என அடுத்த கேள்வி எழுகிறது,பதிலை எங்களிடம் தான் தேடவேண்டும் அதுதான் உண்மையும் கூட…
ஆமா உங்கள் பிள்ளைகளை பெற்றோர் கட்டுபடுத்த வேண்டும்,உங்கள் அண்ணன் தம்பிகளை நீங்கள் கடுப்படுத்த வேண்டும்,உங்கள் மாமன் மச்சானை நீங்கள் கட்டுபடுத்த வேண்டும்,தேவையற்ற நட்பு ,தேவையற்ற பயணம்,தேவையற்ற இரவு நேர வெளியேற்றம்,தேவையின்றி வாங்கி கொடுக்கும் பொருள் என சிலவற்றை குடும்பம் கட்டுபடித்தினாலே போதும் அவர்களின் காவாலித்தனம் அடங்க அடக்க…
இதில் புலபெயர்த்து இருக்கும் உறவுகளின் உறவுகளும் அங்குள்ளார்கள் ,ஆகவே நீங்களும் அவர்களை கட்டுபடுத்த முடியும்,அதை விட்டு எதோ யாழில் ரவுடிஷம் செய்கிறவன் எல்லாம், எதோ வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்து செய்திட்டு போறவன் போல பேசக்கூடாது,யாரோ உங்களில் ஒரு உறவு அதில் இருப்பான் முதலில் அவனை கட்டுபடுத்த முயற்சியாவது செய்யலாம் குறைந்தது…
எல்லாவற்றையும் அரசு பார்க்கணும் ,கூட்டமைப்பு பார்க்கணும் என குற்றம் சுமத்தி, சம்மந்தர், சுமந்திரனை திட்டுவதால் ஒரு பயனும் இல்லை,உங்களில் ஒருவன் தான் அங்கு வாளுடன் திரியுறான் ,உங்களில் ஒருவன் தான் அங்கு குழுவை கொண்டு இயக்குறான் ஆகவே அவனை நீங்கள் தான் கட்டுபடுத்த வேணும்.