உயிர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவசர நிலைமைகளின் போது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பை அண்டிய பகுதிகளில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு 50 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடற்படையினர் உள்ளட்ட முப்படையினரும் காவல்துறையினரும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும் நிவாரணங்களையும் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நிவாரணங்களை வழங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அனர்த்தம் தொடர்பிலான அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டுமெனவும், வெள்ளம் ஏற்படும் தருணத்தில் வீடுகளில் இருக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
குளோபல் தமிழ்