ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் புதிய நிர்வாக தெரிவு .

பன்முகச் செயற்திட்டங்களுடன் உத்வேகம் கொண்ட ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் !!
13263894_1179898182044546_1393760809204136426_n
ஈழத்தமிழர்களுக்கான தனித்துமான அடையாள சினிமாவை கண்டடையும் நோக்கில் செயலாற்றும் ஈழத் தமிழர் திரைப்பட சங்கம் பன்முகச் செயற்திட்டங்களுடன் உத்வேகம் பெற்றுள்ளது.

உலகெங்கும் பரவியுள்ள புலம்பெயர் தமிழர்களின் திரைத்துறையை தனித்துவமாக வளர்த்தெடுத்து, ஈழத்தமிழினத்தின் எதிர்கால சமுக-அரசியல் இருப்புக்கு வலுச்சேர்க்கும் வகையில் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின்னராக, 2010ம் ஆண்டில் ஈழத் தமிழர் திரைப்பட சங்கம் பிரான்சில் தோற்றம் பெற்றிருந்தது.
கடந்த ஞாயிறன்று (22-05-2016)தலைநகர் பாரிசில் கூடிய இதன் பொதுச் சபைக் கூட்டத்தில், பல்வேறு செயற்திட்டங்களுக்கான பொறிமுறையினை உருவாக்கியதோடு, புதிய நிர்வாகத்தினையும் தேர்வும் இடம்பெற்றிருந்தது.
13263689_1179898218711209_6897300750748267080_n
பல்வேறு வாதப்பிரதிவாதங்களுடன் சனநாயக முறையில் இடம்பெற்றிருந்த நிர்வாகத் தேர்வில்,
தலைவராக திரு.றொபேட், செயலாளராக திரு.குணா, பொருளாளராக திரு.சதாபிரணவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
13254235_1179898212044543_1088240325816549616_n
உப தலைவராக திரு.கெங்கேஸ், உப செயலாளராக திரு.அஜந்தன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களாக திரு.ஜனேசன், திரு.சதீஸ், திரு.அகீபன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
திரையிடல், பரப்புரை, ஆவணப்படுத்தல், சந்தைப்படுத்தல், நிதிவளம், கூட்டுச்செயற்பாடு, பன்னாட்டு தளம் என பன்முகச் செயற்திட்டங்களுக்கான உப குழுக்களும் உருவாக்கம் பெற்றிருந்தன.
புதிய நிர்வாக தேர்வுக்கான ஏற்பாட்டுக்குழுவின் சம்பிரதாய நடைமுறைகளைத் தொடர்ந்து, சமூக செயற்பாட்டாளர்களான திரு.பாஸ்கரன், திரு.சுதன்ராஜ் ஆகியோர் நிர்வாக தேர்வுக்கான சபையினை கூட்டாக நடாத்தியிருந்தனர்.
13239211_1179898245377873_1471348722420556472_n

13239463_1179898135377884_3312417237968985721_n
புதிய நிர்வாக குழுவின் சார்பில் ஏற்புரையினை வழங்கிய திரு.றொபேட் அவர்கள், ஆர்வமும் ஆற்றலும் அனுபவமும் உள்ள நாம் அனைவரும் கூட்டாக செயற்படுவதன் ஊடாக, ஈழத் தமிழர் திரைப்பட சங்கத்தின் இலக்கினை எட்ட முடியும் என நம்பிக்கையினைத் தெரிவித்திருந்தார்.
இவைகள் பதவிகள் அல்ல, பொறுப்புக்கள் மட்டுமே, இந்தப் பொறுப்புக்களின் பின்னால் உள்ள கடப்பாட்டினை உணர்ந்து எல்லோரும் சமம் என்ற நிலையிலேயே பாகுபாடற்று இந்த நிர்வாகம் செயற்படுமெனவும் திரு.றொபேட் அவர்கள் தெரிவித்திருந்தார்.

வளப்பெருமக்களாக பங்கெடுத்திருந்த திரு.முகுந்தன், திரு.நாகேஸ் ஆகியோரும் தங்களது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

Copyright © 7342 Mukadu · All rights reserved · designed by Speed IT net