கிளிநொச்சியில் ஒரு தொகுதி கிளைமோர் ,மற்றும் கைக்குண்டுகள் கண்டெடுப்பு

_MG_1244_CI
கிளிநொச்சி இரத்தினபுரம் 3ஆம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றிலிருந்து 10 கிளைமோர் குண்டுகள் மற்றும் 66 கைக்குண்டுகள் மற்றும் 42 மோட்டார் பியுஸ் என்பவற்றை 57ஆம் படைப்பிரிவினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் எடுத்துள்ளனர்.

இன்று (29) பிற்பகல் சுமார் 12 மணியளவில் 57ஆம் படைப்பிரிவினர் குறித்த தேடுதலை ஆரம்பித்து பிற்பகல் 5.30 மணியளவில் முடிவுக்கு கொண்டு வந்தனர்

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, குறித்த வீட்டின் உரிமையாளர் இல்லாத நிலையில் வீட்டைப் பராமரிக்கும் நபர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிணறு இறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது ஒரு கிளைமோர் குண்டு கிணற்றில் இருப்பதை கண்டு கிணறு இறைக்கும் பணியை கைவிட்டதுடன் 57ஆம் படைப் பிரிவினரிடம் தகவல் வழங்கி உள்ளார்

எனினும் கடந்த சில நாட்களாக கிளிநொச்சி பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையால் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது காலநிலை வழமைக்கு திரும்பியுள்ள நேரத்திலேயே இராணுவத்தினர் தமது தேடுதலை முன்னெடுத்துள்ளார்கள்.

இதன்படி இன்று 12 மணியளவில் ஆரம்பித்து 12.5 கிலோக்கிராம் கிளைமோர் குண்டு 01 , 7.5 கிலோக்கிராம் கிளைமோர் குண்டுகள் 3 , 2.5 கிலோக்கிராம் கிளைமோர் குண்டுகள் 6 உள்ளடங்கலாக 10 கிளைமோர் குண்டுகளும் , 66 கைக்குண்டுகள் மற்றும் 42 மோட்டார் பியுஸ்களும் மாலை 5.30 மணிவரைக்கும் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளது

அத்தோடு தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதி மறுக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் முடிவுற்ற பின்பு மீட்கப்பட்ட வெடிபொருட்களை புகைப்படம் எடுப்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது மீட்கப்பட்ட வெடி பொருட்களின் விபரங்கள் வழங்கப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
குளோபல் தமிழ்

Copyright © 4616 Mukadu · All rights reserved · designed by Speed IT net