மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் (Tore Hattrem) உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவினர்கள் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
இவர் இன்று யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவகத்திற்கு விஜயம் செய்ததுடன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, வட மாகாணத்தில் நோர்வே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள், நோர்வே அரசாங்கத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்பட இருக்கும் உட்கட்டுமான பணிகள், சமூக நலன் மேம்பாட்டுத் திட்டங்கள், பொருளாதார ரீதியாக பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் வாழ்வாதார கட்டமைப்புக்களை உருவாக்கல் போன்ற விடயங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
மேலும் மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுக்க பல்வேறு வகையிலான உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக டொரே ஹேடர்ம் தெரிவித்தாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறினார்.
இதனை தொடர்ந்து அவர் வடமாகாண முதலமைச்சரை கைத்தடியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்தார்.
இதன்போது, வடமாகாண சபையின் தற்போதைய நிலைமைகள், அதனுடாக மக்களுக்கு முன்னெடுக்கும் பணிகள் போன்ற பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத தெரண