கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் பாரியளவில் இராணுவ ஆவணங்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தின் தன்னார்வ படைப்பிரிவு ஆவணங்களே பாரியளவில் அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 70,000 படைவீரர்களின் பிரத்தியேக ஆவணக் கோவைகள் முற்று முழுதாக தீக்கிரையாகியுள்ளன.
இந்த ஆவணங்களை மீள பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகிறது. 1881ம் ஆண்டு இலங்கை தன்னார்வ படைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கொஸ்கம இராணுவ முகாம் தீவிபத்து காரணமாக 18,628 பேர் இடம்பெயர்வு
கொஸ்கம இராணுவ முகாமின் ஆயுதக்களஞ்சிய சாலையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தினால் ஒரு கிலோமீற்றருக்கு உள்ளே இருந்த 300 வீடுகள் மற்றும் இரண்டு தொழிற்சாலைகள் என்பன முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் 5 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 1,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் சீதாவாக்க பிரதேச செயலாளர் எஸ்.கே.பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஒரு கிலோமீற்றருக்குள் வாழ்ந்த 18 ஆயிரத்து 628 பேர், இடம்பெயர்ந்து அவர்கள், பாடசாலைகள், விஹாரை மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட 11 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குளோபல் தமிழ்