இனி ஒருபோதும் யுத்தம் ஏற்படப்போவதில்லை என தான் நம்புவதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்தும் இராணுவத்தினர் வடக்கில் நிலைத்திருப்பது பொதுமக்களின் நன்மைக்காகவென்றும்,அவர்களின் நன்மைக்காக இராணுவம் முழுமூச்சுடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். படைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே கட்டளைத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கில் நிகழும் அனர்த்த நிலைமைகள், வேறு அசம்பாவிதங்களின் போது இராணுவத்தினர் மக்களுடன் இணைந்து சேவையாற்றுகின்றனர். சாதாரண பொதுமக்களின் அனைத்து பிரச்சினைகளையும் அருகில் இருக்கும் படை முகாம்களில் முன்வைத்தால் தீர்வு அல்லது நிவாரணங்கள் பெற்றுக்கொடுப்பதற்கு படையினர் தயாராக இருப்பதாகவும் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
செய்தி.com