காலம் செல்வத்தின் ^எழுதித்தீராத பக்கங்களை ^வாசித்து முடித்தேன் எனது அடிமனதை தொட்டுப்பதம்பார்த்துச்சென்ற படைப்பாகக்கருதுகின்றேன். இந்த படைப்பைப்பற்றி எழுதாவிட்டால் நல்ல படைப்பை படித்துவிட்டு தட்டிக்கழிப்பது போன்றது. ஒரு குட்டி அறை அதற்குள் நான்கு அடுக்கு கட்டில் கட்டிலின் கீழே ஓர் இருவர் வெறும் தரையில் உடத்துகிற சாரத்தை விரித்துவுட்டு ஒரு துணியால் முகத்தை மூடி ரூப இருந்து கொண்டு வந்த ரபிளின் பாக்க (bag )ஐ தலைக்குள்ள வச்சு அரத்தூக்கத்தில எப்படா கட்டில விட்டுமற்றவன் எழும்புவான் தான் பொய் படிக்க என்ற எண்ணத்தில் ஒரு ஏங்கிக்கொண்டு இருப்பவன்.
கழிப்பறைகளில் விடி விடியெண்டு போய் லயினில நிக்கிறது ஊரில சங்கக்கடயில றேசனுக்கு நிண்ட மாதிரி, அடிமாடுகள் போல் வேலை செய்து அதில வரும் கொஞ்ச சம்பளத்தில் அம்மாவுக்கு வீட்டில அடுப்பெரிய காசு அதில மிச்சம்புடிச்சு இங்க றூம் சமறிக்காசு அதில மிச்சம் புடிச்சு உடுப்பு தோய்கிற மெசினுக்கு உடுபுடவை ஊரில இருந்து கொண்டுவந்ததையே வருசக்கணக்கா பட்டையடிச்சு வாழுற வாழ்க்கை ஊரில வாழுகின்ற மனிதருக்கு தெரியாமலே போய்விடுகின்றது .ஏண்டா வந்தம் உடுப்பு பைய தூக்கிக்கொண்டு என்று சிந்திக்க தோன்றும் நரக நகர வாழ்க்கையடா இது நாடற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையா இல்லை வரமா? ஒரு வடிவா ஈபிள் ரவறையும் வைற் சேர்சையும் ஒரு காறுக்கு பக்கத்தில வச்சு போட்டோ எடுத்து அனுப்புன உடன அங்க உள்ளதுகளுக்கு புழுகு வந்திரும் வெளி நாடு வந்துவிட வேணும் எண்டு இங்க உள்ளதுகளது கஸ்ரங்கள் அங்க உள்ளதுகளுக்கு தெரியாமலே போய்விடுகின்றது.
என்ன வாழ்க்கையடா சாமி என்னத்த கண்டோம் துன்பத்த விட நாங்கள் பரிஸ் நகரங்களின் ஊடே கடக்கும் ஆறுகளுனும் உயர்ந்து வளர்ந்த கட்டிடங்களுடனும் தான் பேசிவோம் எங்களது சோகங்களை அற்றுவதற்காக இலவசமாக கண்ணுக்கு விருந்தளிக்கும் வெள்ளக்கார பொண்டுகளும் குறைந்தது தடவி அனுபவிக்க சதைகளும்குறைந்த விலையில் வொட்காவும் வைனும் இவையும் இல்லையென்றால் இங்க உள்ள துன்பப்பட்ட தமிழரின் நிலைதான் என்ன?நான் குறிப்பிட்ட அத்தனை விடயங்களையும் இந்த புத்தகத்தில் தருசித்தேன் நிஜத்தை புத்தகம் முழுவதும் தோய்த்து எடுத்து இருக்கின்றார்.
இது சராசரி மனிதன் எதிர்கண்ட விடயம்தான் புலம்பெயர்ந்து மேலைத்தேய நாடுகளுக்குள் தஞ்சம் அடையும் மனிதரின் வாழ்க்கைமுறையையும் அவர்கள் படும் இன்னல்களையும் பிரதி செய்து எழுதி இருக்கின்றார் 80 களின் முன் பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைந்திருந்தாலும் அந்த காலகட்டத்தில் தமிழர்களுக்குள் இடம்பெற்ற பிரச்சனைகளை சுவாரசியமாகவும் நகைச்சுவைப்பாணியிலும் எழுதி இருக்கின்றார் எதுவும் கற்பனையல்ல மொழிப்பிரச்சனை தங்குமிடப்பிரச்சனை,புதிய இடம் பெரிய நகரம் தொழில் விசா பொலிஸ் பிரச்சனை வெளி நாட்டுக்கு வந்த கடன் இவ்வாறு நீண்டு கொண்டேசெல்கின்றது.
எனது மனதோடு ஒட்டிய இந்த படைப்பு வாசிக்கும் போது எனது சொந்த அனுபவம் போல் உணர்ந்தேன் ஒவ்வொரு பக்கத்தையும் எவ்வளவு அழகாக நகர்த்திச்செல்கின்றார் அவரது எழுத்து நடை பிரமாதம் சாமானியனும் புரிந்துகொள்ளக்கூடியவகையில் அமைந்து இருக்கின்றது. சின்னச்சின்ன விடயங்களையும் அழகாகக்கவனித்து இருக்கின்றார் அதற்கு காரணம் படைப்பாளி பரிஸ் நகரவாழ்க்கையை அனுபவித்து இருப்பதனாலே வாசிக்க சலிக்காத கதை நகர்வு என்னை வெகுவாக கவர்ந்து இருந்தது ஊரில உழைகாமல் வெளி நாட்டில மரத்தில காசு காய்கின்றது புடுங்க வேண்டியதுதான் என்று நினைப்பவர்கள் கட்டாயம் ஒருக்கா எழுதிதீராத பக்கங்களைப்படித்தாலே போதும் அந்த எண்ணத்தை அடியோட மறப்பான் எனக்குத்தெரிந்து தமிழில் முதன் முதலாய் புலம்பெயர்ந்த தமிழர்களைப்பற்றிய சுவையான ஒரு படைப்பு பாராட்டி போற்ற வேண்டிய இருக்கின்றது.
வாழ்த்துக்கள் -காலம் செல்வம்.