ஈழ கலைஞர்களின் வேர்வையை உழைப்பை தங்களின் இலாபத்துக்கு மட்டும் பயன்படுத்தும் சில இணைய ஊடகங்கள் பற்றி தனது ஆதங்கத்தை காட்சி வடிவில் கொண்டுவந்து இருக்கிறார் இயக்குனர் ,நாங்கள் கொடுக்கும் மரண அறிவித்தல் முதல் கொண்டு பிறந்தநாள் வரை பணம் வாங்கி கொண்டு பிரசுரிக்கும் இணையங்கள் ஈழ படைப்புக்களை மட்டும் தங்கள் அனுசரணை லோகா போட்டால் தான் போடமுடியும் என்னும் வாதமும் ,அதற்கு அவர்கள் எந்த கொடுப்பனவும் கொடுக்க மாட்டார்கள் என்பதுதான் வேதனையான விடயம் .
தெளிவாக ஒரு படைப்பை எடுத்து முதலில் கலைஞர்கள் ஒற்றுமை முக்கியம் என்பதை ஆணி அடித்தால் போல சொல்லி போகிறார் இயக்குனர் வாழ்த்துக்கள் அனைத்து நடிகர்களுக்கும் .