தனது தந்தையின் தலையை தாக்கியிருந்த துப்பாக்கிச் சூட்டினை பார்க்கும் போது, அப்படியான தாக்குதலுக்கு இலக்காகும் ஒருவர் ஒரு வினாடிகூட உயிர்வாழ முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
தனது தந்தையான பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்த புகைப்படத்தை தனது பேஸ்புக் இல் பதிவு செய்து இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை தான் குறித்த புகைப்படத்தை முதல் தடவையாக வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
”இந்த புகைப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு நேரமும், இது ஒரு உண்மையான புகைப்படம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஏன் என்றால் எனக்கு எப்போதும் நினைவில் இருப்பது அவரின் சிரித்த அழகான முகம் மாத்திரமே. எனது வாழ்க்கையில் முதல் தடவையாக இந்த புகைப்படத்தை வெளியிடுகிறேன். உங்கள் கருணைக்காக அல்ல. தந்தையின் தலையில் துப்பாக்கியால் எவ்வாறு சுடப்பட்டிருந்தது என்பதை இதனால் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
இப்படியான தாக்குதலுக்கு பின்னர் ஒரு வினாடி கூட உயிர் வாழமுடியாது என்பதை தெரிந்துகொள்வதற்காகவே..” என புகைப்பட த்தை பதிவு செய்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.