நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக 125 கடைகளில் 225 மில்லியன் ரூபா சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளது என கரைச்சி பிரதேச சபையின் ஆரம்ப கட்ட மதிப்பீட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த தீ விபத்தில் 66 கடைகள் முழுமையாக எரிந்து அழிந்துள்ள நிலையில், 59 கடைகள் பகுதிகயளயில் எரிந்து அழிவடைந்துள்ளது. இதில் 24 புடவை கடைகள் முழுமையாகவும் 34 புடவை கடைகள் பகுதியளவில் அழிவடைந்துள்ளன. மேலும் அழகுசாதன கடைகளில் 20 கடைகள் முழுமையாகவும், 25 கடைகள் பகுதியளவிலும் எரிந்துள்ளன. அத்தோடு 22 பழ வியாபார கடைகளும் முற்றாக எரிந்துள்ளன.
தீயினால் அழிவுக்குள்ளான கடை உரிமையாளர்களால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாக கரைச்சி பிரதேச சபையினரால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் படி 225 மில்லியன் ரூபா சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது.
நன்றி குளோபல் தமிழ்