சுமார் 2 லட்சம் நேட்டோ படைகளை ஐரோப்பிய நாடுகள் தயார் நிலையில் இருக்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளது. கடந்த 20 வருடங்களில் இதுபோன்ற ஒரு சிகப்பு எச்சரிக்கை விடுக்கபப்ட்டதே இல்லை. காரணம் என்னவென்றால் ரஷ்யாவின் பாரிய விமானம் தாங்கி ஆயுதக் கப்பல் சிரியாவுக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளதோடு. சிரியாவில் தாம் ஐ,எஸ் தீவிரவாதிகளை தாக்குவதாக கூறி, ரஷ்யா பெரும் படையை ஐரொப்பா நோக்கி நகர்த்தியுள்ளது. மேலும் ரஷ்யாவின் நேற்று முன் தினம் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு ஒன்றில், கடந்த 50 ஆண்டுகளில் தயாரிக்கப்படாத புதுவகையான யுத்த தாங்கிகளை தயாரித்து ரஷ்யா வெளி உலகிற்கு காட்டியுள்ளது.
இவைகளை தகர்க்க முடியாது என்று பிரித்தானிய ராணுவ ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். புதுவகையான உலோகங்களால் ஆன , இந்த யுத்த தாங்கிகளை ஏவுகணைகளைக் கொண்டு அழிக்க முடியாது என்றும். இவை ஐரோப்பா நோக்கி நகர்ந்தால் அதனை அழிப்பது மிகவும் கடினமான விடையம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதன் காரணத்தால் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தற்போது பதற்றத்தில் உள்ளது. தமது படைகளை உஷார் நிலையில் வைத்திருக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.