முல்லைத்தீவு கொக்காவில் ஐயன்கன்குளம் வீதி புனரமைக்கப்படாமையினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாடம் துன்பங்களை அனுபவித்து வருகின்றன.
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட தேறாங்கண்டல் ஐயன்கன்குளம் பழையமுறிகண்டி புத்துவெட்டுவான் மருதன்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கான பிரதான வீதியாக காணப்படும் கொக்காவில் துணுக்காய் வீதி இதுவரை புனரமைக்கப்படாமலும் போக்குவரத்து வசதிகளும் இன்றியும் காணப்படுகின்றது.
இதனால் இவ்வீதியை மையமாககொண்டமைந்துள்ள ஆறுக்கும் மேற்பட்ட விவசாயக்கிராமங்களில் வாழும் சுமார் ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாடம் போக்கவரத்துக்களில் சொல்லனத்துன்பங்களை அனுபவித்துவருகின்றன.
குறித்த வீதியை முழுமையாக புனரமைக்கவேண்டிய தேவைகாணப்படுகின்றபோதும் தற்போது 2.32 கிலோமீற்றர் வரையான பகுதி மாத்திரமும் புனரமைக்கப்பட்டுள்ளது என்று பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.