முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும் குடிநீர் இல்லை!
நாட்டில் நிலவிய கடும் வரட்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது மாவட்ட செயலக கிணற்றில் நீர் வற்றியுள்ளது.
இந்நிலையில் வேறு இடங்களில் இருந்து வவுசர் மூலம் நீர் விநியோகம் இடம்பெற்றுவருகின்றது.
அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களிலும் குடிநீர் பிரச்சனை காணப்படுவதோடு பல குளங்கள் கூட நீர் வற்றி நீர் இல்லாது பாரிய சிக்கல் நிலை எழுந்துள்ளது.
இந்நிலையில் சில இடங்களில் இரு தினங்களாக மழை பெய்துவருகின்றது குறிப்பிடத்தக்கது.