Online விற்பனைக்காக புதிய செயலியை உறுவாக்குகிறது Instagram!
பிரபல புகைப்பட பகிர்வு செயலியான Instagram தனது வாடிக்கையாளர்களுக்கான ப்ரத்தியேக சந்தை செயலியினை உறுவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
அமேசான், ப்ளிப்கார்ட் போன்று தனிதுவ செயலிகள் மூலம் சந்தை பொருட்களை விற்பதற்கு ஏதுவான சந்தை பயன்பாட்டு செயலியினை உறுவாக்க Instagram திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த புது செயலியில் அறிமுகம் எப்போது என்பது குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாவில்லை.
தங்கள் அருகாமை சந்தையில் இருக்கும் பொருட்களை வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தப்படியே கையில் இருக்கும் கைப்பேசிகளை மட்டும் பயன்படுத்தி வாங்கிக்கொள்ளும் கலாச்சாரம் தற்போது பிரபலமாகி வரும் நிலையில் அதற்கு ஏற்றவாறு புதிய செயலியை உருவாக்க Instagram களத்தில் இறங்கியுள்ளது.
facebook நிறுவனம் Instagram-னை வாங்கிய பிறகு அதில் பல அதிரடி மாற்றங்களை தொடர்ந்து கொண்டுவந்துகொண்டே வருகிறது.
அந்த வகையில் முன்னதாக ஸ்டோரி என்ற அம்சத்தினை அறிமுகம் செய்தது.
இதனையடுத்து தொடர்ந்த பல அம்சங்களையும் Instagram தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது.
தனது செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்களை புகுத்தி வந்த Instagram தற்போது தனது நிறுவனத்தின் சார்பில் புதிய செயலியினையே அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது!