சூடானில் இரு இராணுவ விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!
சூடான் விமான நிலையத்தில் இரு இராணுவ விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையினுள் இதில் பயணித்த 8 பேர் காயமடைந்துள்ளனர்.
கர்டௌம் விமான நிலையத்தில், (புதன்கிழமை) மாலை வந்திறங்கிய இரண்டு இராணுவ விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டன.
இந்த விபத்திற்கு தொழிநுட்ப கோளாறே காரணம் என்றும் தற்போது அந்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் அங்கு வந்திறங்க வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பப்பட்டுள்ளன.
அத்துடன் விமானங்கள் இரண்டுக்கும் அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.