புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு! தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள் – யாழ் மாணவர்கள் இருவர்!
2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.
வெளியாகிய பெறுபேறுகளுக்கமைய இரண்டு மாணவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
பிலியந்தலை சோமவீர சந்திரசிறி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் புமித் மெதன்முல வித்தானக என்ற மாணவனும், வேயங்கொட தூய மேரி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் கே.சனுப திமத் பெரேரா என்ற மாணவனும் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
குறித்த இருவரும் 199 புள்ளிகளை பெற்று இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இரண்டாம் இடம் மூன்று பாடசாலைகளுக்கு கிடைத்துள்ளது.
மினவங்கொட ரெஜி ரணதுங்க வித்தியாலயத்தின் சேனுஜி ஹெட்டிஆராச்சி என்பவரும், யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் மகேந்திரன் திகழொளிபவன் மற்றும் சாவகக்சேரி ஆரம்ப பாடசாலை மாணவன் வாஸ்கன் நதி என்பவரும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் 198 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.
தமிழ் மொழியில் இரண்டாம் இடத்தை வவுனியா சிவபுரம் ஆரம்ப பாடசாலை மாணவி பாலக்குமார் ஹரித்திக்ஹனுசுஜா பெற்றுள்ளார்.