பாரிசில் வரவிருக்கும் புதிய நடைமுறை!
பிரான்சின் பாரிஸ் நகரில் காற்று மாசு அதிகரித்து வருவதால் புதிய நடைமுறை ஒன்றை கொண்டு வரவுள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்சின் பாரிசில் தான் காற்று மாசு அதிகம் இருக்கிறது.
இதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசாங்கம், ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் நகரின் முக்கிய பகுதிகளில் கார்களை இயக்க தடை விதித்துள்ளது.
இதன்படி காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை இருசக்கர வாகனங்கள், மிதிவண்டிகள் மற்றும் சாலையோர நடைபாதை ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் டெலிவரி வாகனங்கள் மற்றும் மருத்துவ அவசர வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.