25 வருட வரலாற்றை மாற்றியமைத்த மூன்று மாணவிகள்!
காரைதீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் 3 மாணவிகள் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
ஏ.பாத்திமா றிமாஸ் (169), எம்.ஜே.பாத்திமா ஜஸா (168), எம்.எஸ்.பாத்திமா சன்ஹா (167) ஆகிய மூன்று மாணவிகளே சித்தியடைந்துள்ளனர்.
இந்த பாடசலை வரலாற்றில் மூன்று மாணவிகள் சித்தியடைந்தது இதுவே முதல் தடவையாகும் என பாடசாலை அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ.நழீர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறான பரீட்சை பெறுபேறுகளை பெறுவதற்கு காரணமாக அமைந்த ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாடசாலை அதிபர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.