ஜா- எல யில் துப்பாக்கிப் பிரயோகம்! ஒருவர் காயம்!
ஜா-எல இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஜா – எல பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் இரவு ஜா-எல, ரத்தொழுகம அடுக்குமாடி வீட்டுத்திட்ட பகுதியிலுள்ள மைதானத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரியோ குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.