புலிகளின் செயற்கை காடுகளில் இராணுவத்தினரின் புதிய திட்டம்!
முல்லைத்தீவு – கேப்பாபுலவு பிரதான இராணுவமுகாமை சூழவுள்ள தேக்குமரக்காடுகளை பாதுகாப்பதில் படையினர் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“சூழுலை நாம் பாதுகாப்பின் சூழல் நம்மை பாதுகாக்கும்” “மர நிழல் தரும் குளிர்ச்சி மனதிற்கு இதமானது.” போன்ற வாசகங்களை பெரிய கருங்கற்களில் எழுதி காட்சிப்படுத்தியுள்ளனர்.
2009ம் ஆண்டிற்கு முன்னர் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் வனவள பாதுகாப்பு பிரிவினாரால் முல்லைத்தீவில் பல்வேறு இடங்களில் தேக்குமரங்களை நட்டு செயற்கை காடுகளை உருவாக்கியிருந்தனர்.
இந்த நிலையில் இறுதியுத்தத்தின் பின்னர் சட்டவிரோதமாக இந்த மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டதுடன் சில பகுதிகளில் திட்டமிட்டு தீமூட்டி அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்மையில் கேப்பாபுலவு பிரதான இராணுவ முகாமை சூழவுள்ள தேக்கங்காட்டு பகுதியில் தீபரவல் ஏற்பட்டிருந்தது.
59 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கேப்பாபுலவு பிரதான இராணுவமுகாமை சூழவுள்ள தேக்கமரக்காடுகளை பாதுகாப்பதற்காக படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.