கடன்கள் பற்றி தகவலை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்!
அரசாங்கம் இதுவரையில் பெற்றுள்ள அரச முறை கடன்கள், மீள் செலுத்தியுள்ள கடன் மற்றும் வட்டி தொடர்பிலான விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என மஹிந்த அணி கோரியுள்ளது.
கொழும்பில் (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சி. பி. ரத்னாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
‘அரசாங்கம் இதுவரையில் பெற்றுள்ள அரச முறை கடன்கள், மீள் செலுத்தியுள்ள கடன் மற்றும் வட்டி தொடர்பிலான விடயங்களை நிதியமைச்சர் மங்கள சமரவீர பகிரங்கப்படுத்த வேண்டும்.
கடந்த அரசாங்கம் பாரிய முறையற்ற கடன்களை பெற்றுள்ளது என்று குற்றஞ்சாட்டும் தேசிய அரசாங்கம் குறுகிய காலத்தில் கடந்த அரசாங்கத்தை விட அதிகமாக கடன் பெற்றுள்ளது’ என தெரிவித்துள்ளார்.