வீடுகள் அமைப்பதை தடுத்தவர்கள் யார் என்பதை மக்கள் நன்கறிவர்!

வீடுகள் அமைப்பதை தடுத்தவர்கள் யார் என்பதை மக்கள் நன்கறிவர்!

எனது அமைச்சின் செயற்பாடுகளையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடமைத்துக் கொடுக்க எடுத்த முயற்சிகளையும் யார் தடுத்தார்கள் என்ற உண்மையை மக்கள் நன்கு அறிவார்கள் எனத் தெரிவித்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தனிப்பட்ட அரசியல் இலாபத்தினை மறந்து எல்லோரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றி, புனர்வாழ்வளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்குடன் உருவாக்கப்பட் அமைச்சே மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கின் அபிருவத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சாகும்.

மேற்படி அமைச்சுக்கு புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் 2016 ஆம் ஆண்டு 14 பில்லியன் ரூபபா ஒதுக்கீடுகளை வழங்கியதில் 9.1 பில்லியன் ரூபாவில் 11,253 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.

மேலும் 2017 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 9 பில்லியன் ரூபாவில் 6,174 வீடுகளை நிர்மாணித்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியிருந்தோம்.

அத்துடன் எமது அமைச்சின் மிகுதி ஒதுக்கீட்டில் மத்திரம் அம் மக்களின் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்திருந்தோம்.

இவ்வாறு அமைச்சு செய்யும் வேலைகளை சகித்துக் கொள்ள முடியாத சில அரசியல்வாதிகளின் அழுத்தத்தினால் ஒதுக்கீட்டுத் தொகை 2018 ஆம் ஆண்டுக்கு வெறும் 750 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டது.

அத்துடன் வடகிழக்கில் வீடுகள் நிர்மாணிப்பதற்காக அமைச்சுக்கு வழங்க வேண்டிய தொகையை நிறுத்தி வீடமைப்பு அமைச்சுக்கு 3 பில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டிருந்து.

இந் நிலையில் வீடு கட்டுவதற்காக 2018 ஆம் ஆண்டில் எந்த ஒக்கீடும் வழங்கப்படாத நிலையில் சாவகச்சேரி மந்துவில் பிரதேசத்தில் இம்மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற ஒரு விழாவில் சுமத்திரன் எம்.பி. எனது அமைச்சு வீடுகட்டிக் கொடுக்காத காரணத்தினால் வீடுகட்டும் பொறுப்பை 3 வருடங்களில் 5,000 குறைவான வீடுகளை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் அடிப்படையில் கட்டிக் கொடுத்த வீடமைப்பு அமைச்சுக்கு வழங்குமாறு கோரியிருந்தார்.

2016, 2017 ஆகிய இரண்டு வருடங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களிக்கும் அண்டிய பிரதேசமக்களிற்கும் எமது அமைச்சினால் பின்வரும் வேலைத்திட்டங்ளை பூர்த்தி செய்து மக்களிடம் கையளித்தது பற்றி இவர் அறிந்திருக்கவில்லையா? எனவும் கேள்வி அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Copyright © 0940 Mukadu · All rights reserved · designed by Speed IT net