குரங்கை வைத்து பேருந்தை ஓட்டிய சாரதி!

குரங்கை வைத்து பேருந்தை ஓட்டிய சாரதி!

இந்தியாவில் குரங்கை வைத்து பேருந்தை ஓட்டிய சாரதியை பணியிடை நீக்கம் செய்த சம்பவமானது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

பிரகாஷ் என்ற நபர், கர்நாடக மாநிலம் தவங்கரேயில் அரசுக்கு சொந்தமான பேருந்தின் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார்.

இவர் குரங்கை ஒன்றை வளர்த்து வரும் நிலையில், அந்த குரங்கை வீட்டு வேலைகள் செய்யவும், தனக்கு உதவி செய்யவும் பல்வேறு பயிற்சி வழங்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பணிக்குவரும் போதும் அந்த குரங்கை அவ்வப்போது அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு பேருந்தின் ஸ்டியரிங் வீல்லின் மீது குரங்கை அமர வைத்து பேருந்தை ஓட்டியுள்ளார்.

இதன் போது குறித்த பேருந்தில் சுமார் 30 பேர் பயணித்துள்ளதாகவும், இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், அவர் மீது முறைப்பாட்டினை பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இதனை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதால அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையடுத்து, பேருந்து சாரதி பிரகாஷை கர்நாடக மாநில பேருந்து போக்குவரத்து நிர்வாகம் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளது, இது குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் “அவரது தடை நியாயம் இல்லை என்றும் அவரை இந்த விடயத்தை மீண்டும் செய்யக்கூடாது என்று எச்சரிக்க வேண்டுமே அன்றி பணி நீக்கம் செய்தது தவறு” என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.

https://metro.co.uk/video/monkey-drives-bus-india-1777148/?ito=vjs-link

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net