ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், ‘ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை முன்வைக்கவில்லை.

ஜனாதிபதி இவ்விடயத்தை கவனத்தில் கொண்டு விரைவில் அவரை விடுதலை செய்ய வேண்டும்.

அன்று நீதிமன்றத்தில் இராணுவ புலனாய்வு அதிகாரிகளை சிறை வைப்பதற்கு எதிராகவே தேரர் கருத்து தெரிவித்தார்.

கருத்துக்களைத் தெரிவித்ததன் பின்னர் தான் தெரிவித்த கருத்துக்களில் ஏதேனும் தவறுகள் காணப்பட்டால் மன்னிக்குமாறும் ஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பொய் சாட்சிகளை தெரிவித்தே ஞானசார தேரரை கைது செய்து சிறை வைத்துள்ளனர்.

ஆகவே இது தொடர்பில் நாட்டின் தலைவரான கவனம் செலுத்துவதோடு தாங்கள் நேரடியாக தலையிட்டு ஞானசார தேரரை விரைவில் விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net