புலிகளை ஒழித்தமைக்காக மகிந்தவை இந்தியர்கள் மெச்சுகின்றனர்!

புலிகளை ஒழித்தமைக்காக மகிந்தவை இந்தியர்கள் மெச்சுகின்றனர்!

விடுதலைப்புலிகளை ஒழித்தமைக்காக இந்தியர்கள் மகிந்தராஜபக்சவையும் இலங்கை மக்களையும் மெச்சுகின்றனர் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்

கொழும்பின் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு வழங்கியுள்ள மின்னஞ்சல் பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்

சுப்பிரமணியன் சுவாமி மேலும் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தது போன்று இந்தியர்களும் இலங்கையர்களும் உறவினர்கள் என்பது எனது கருத்து.நாங்கள் ஒரு குடும்பமாக வாழ பழகிக்கொள்ளவேண்டும்.

விடுதலைப்புலிகளை முன்னாள் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் அழித்தமைக்காக இந்தியர்களாகிய நாங்கள் உங்களை மெச்சுகின்றோம்.

இதன் மூலம் நீங்கள் இலங்கையை மாத்திரம் பாதுகாக்கவில்லை இந்தியாவையும் பாதுகாத்துள்ளீர்கள்.

இனங்கிற்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை உங்கள் அரசாங்கமே மேற்கொள்ளவேண்டும்.

வடகிழக்கில் உள்ள இலங்கையர்கள் முதலில் தங்களை இலங்கையர்களாக கருதவேண்டும், அதன் பின்னரே தமிழர்களாக கருதவேண்டும். சிங்களவர்களும் அவ்வாறே தங்களை கருதவேண்டும்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் அதன் பயனை இழந்துவிட்டது.

சிங்கள எதிர்ப்பு தமிழ் பிரிவினைவாத இயக்கங்கள் தமிழ்நாட்டில் தோல்வியடைந்துவிட்டன பலமிழந்துவிட்டன.

மகிந்த ராஜபக்ச சமீபத்தில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இடம்பெறாதமை இதற்கு சிறந்த உதாரணம்.

மகிந்த ராஜபக்சவிற்கும் இந்திய பிரதமரிற்கும் இடையில் ஆக்கபூர்வமான சுமூகமான சந்திப்பு இடம்பெற்றது.

அவர்கள் இருவருக்கு இடையில் மாத்திரமே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதால் என்ன பேசினார்கள் என்பது தெரியாது.

திருகோணமலை துறைமுகத்தை யாரிற்கு வழங்கவேண்டும் என தீர்மானிப்பது இலங்கைக்குரிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 9375 Mukadu · All rights reserved · designed by Speed IT net