மட்டக்களப்பில் 18 வயது இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருவில் கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
நேற்று (புதன்கிழமை) 11மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் உடனே களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை பெண்ணின் உடல் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காதல் தோல்வியால் ஏற்பட்ட மனவிரக்தியால் குறித்த தற்கொலை செய்திருக்கலாம் என அயலவர்கள் தெரிவித்தனர். இவ்வாறான தற்கொலைகள் தமிழ் சமூகத்தினரிடம் அதிகரித்துள்ளது.
பெண்களுக்கு ஆசை வார்தைகள் கூறி ஏமாற்றுகின்ற சிலரின் அடாவடித்தனமே இவ்வாறு பெண்களின் தற்கொலைக்கு காரணமாக அமைகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.