மன்னார் மனித புதைகுழியை பார்வையிட்ட தமிழ் நாடு மக்கள் கண்காணிப்பகம்!
தமிழ் நாடு ‘மக்கள் கண்காணிப்பகம்’ பொது அமைப்பின் பிரதி நிதிகள் 7 பேர் அடங்கிய குழுவினர் இன்று 4 மணியளவில் மன்னாருக்கு வருகை தந்த நிலையில் மன்னார் ‘சதொச’ வளாகத்தில் இடம் பெற்று வருகின்ற மனித எலும்புக்கூடு அகழ்வு பணியை நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
சட்டத்தரணி செல்வராசா டினேசன் ஊடாக மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுக் கொண்ட தமிழ் நாடு ‘மக்கள் கண்காணிப்பகம்’ பொது அமைப்பின் பிரதி நிதிகள் 7 பேர் அடங்கிய குழுவினர் இன்று 4 மணியளவில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு இடம் பெறும் வளாகத்திற்கு சென்றனர்.
குறித்த குழுவில் சட்டத்தரணிகள், தடவியல் நிபுணர்,பேராசிரியர்கள் உள்ளடங்களாக இரு பெண்கள் உற்பட 7 பேர் அடங்குகின்றனர்.
அகழ்வு பணிகள் இடம் பெறுகின்ற குறித்த வளாகத்திற்குள் சென்ற குறித்த குழுவினர் அகழ்வு பணிகளை தலைமை தாங்கி மேற்கொண்டு வரும் விசேட சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸவை சந்தித்து உரையாடினர்.
இதன் போது குறித்த வளாகத்தில் இடம் பெற்று வருகின்ற மனித எலும்புக்கூடுகள் தொடர்பான விளக்கத்தை தமிழ் நாடு ‘மக்கள் கண்காணிப்பகம்’ பொது அமைப்பின் பிரதிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
இதன் போது மன்னார் சட்டத்தரணி செல்வராசா டினேசனும் குறித்த குழுவினருடன் இணைந்து கொண்டு பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.