தேசிய மர நடுகை மாதத்தினைனெயாட்டிய மாவட்ட நிகழ்வு இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. தேசிய மர நடுகை இம்மாதம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இததை தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் மரநடுகை மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று கிளிநொச்சியில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, கிளிநொச்சிய அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்களக வளாகத்தில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
இலங்கை வனலாகா திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ் பல்கலைக்கழக கிளிநாச்சி வளாகம் ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் முதன்மை அதிதியாக கலந்து கொண்டதுடன், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் விக்னேஸ்வரன், விவசாயம், பொறியியல், தொழில்நுட்ப பீடி பீடாதிபதிகள், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பான குறித்த நிகழ்வில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்