எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை!

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கைகள் தொடரும் என பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஆய்வு நிறுவனம் ஒன்றில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தொடர் பயங்கரவாத அச்சுறுத்தல் அல்லது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் அரங்கேறும் பயங்கரவாத தாக்குதல்களை, எல்லை தாண்டிய பயங்கரவாதமாக மிகத் தெளிவாக கூறமுடியும்.

நாட்டின் பாதுகாப்புக்கு இதுவே முதன்மையான அச்சுறுத்தல் ஆகும். அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்கள், பினாமிகள் மூலம் அடிக்கடி நிகழ்த்தும் வன்முறைகள் அச்சுறுத்தலை அதிகரிக்கின்றன.

அயல்நாடாக பாகிஸ்தான் பயங்கரவாதக் கட்டமைப்புகளும், அதன் அரசு ஆதரவு பயங்கரவாதிகளும் இந்தியாவின் பொறுமையை தொடர்ந்து சோதித்து வருகின்றனர்.

ஒரு பொறுப்புள்ள அரசாக, இந்த அச்சுறுத்தல்களை கையாளுவதில் நாங்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டை பேணி வருகிறோம்’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net