யாழில் அரச செலவில் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள்!

யாழில் அரச செலவில் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள்!

யாழ். நல்லூர் பிரதேச செயலக பிரிவிற்கான உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை நடமாடும் சேவை யாழ். இந்து கல்லூரியில் இன்று இடம்பெற்றது.

நல்லூர் பிரதேச செயலாளர் எழிலரசி தலைமையில் யாழ். இந்து கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வை உள்நாட்டலுவலகள் இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஜனாதிபதி மக்கள் சேவை செயற்திட்டத்தின்போது நல்லூர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தேவையுடையவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு பொருட்கள், காணி உறுதிகள் மற்றும் வாழ்வாதார ஊக்குவிப்புத் தொகைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் துரித கதியில் அடையாள அட்டை, பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் என்பவற்றை பெற்றுக்கொள்ள பதிவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் திருமணம் புரியாமல் இணைந்து வாழ்ந்துவந்த தம்பதிகளுக்கு அரச செலவில் திருமண பதிவுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன், யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net