ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு பங்களிப்பு செய்த பிரபல எழுத்தாளர் மரணம்
இலங்கையின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் தனது 66 ஆவது வயதில் நேற்று காலமாகியுள்ளார்.
ஈழத்தின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராக, சிறந்த நாவலாசிரியராக, இலக்கிய படைப்பாளியாகத் திகழ்ந்த இவர், பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு இலக்கியம், எழுத்து, பிற செயற்பாடுகளின் வழியாக பங்களிப்புகளைச் செய்து வந்தவர்.
ஈழப்போராட்டத்தின் பின்னணியிலான வாழ்வியல் சூழலை பிரதிபலிக்கும் இலக்கியங்களை படைத்தார்.
முள்முடி மன்னர்கள், இருள் இரவில் அல்ல, மருத்துவர்களின் மரணம், என்றாவது ஒருநாள், என்னுடையதும் அம்மாவினுடையதும் உள்ளிட்ட இவரது சிறுகதை தொகுப்புகளும், நாவல்களும் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
இவரது படைப்புகள் சிங்கள மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு சிங்கள நூல்களாகவும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.